திருச்சி வந்த நடிகர் அஜித்…. நடிகர்களை சந்தித்த பின் என்ன செய்தார் தெரியுமா?…. நெகிழ வைத்த சம்பவம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

சமீபத்தில் அவர் திருச்சி துப்பாக்கி சூடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு போலிஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் DC ஸ்ரீதேவி அவர்கள் திருச்சியில் நடந்த விஷயம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், அஜித் அவர்களிடம் ரசிகர்களை சந்திப்பது கேட்டபோது ரசிகர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, நீங்கள் என்ன கூறினாலும் அதை செய்கிறேன் என சார் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியாக நன்றி கூறியவர் எனக்கு மட்டும் இல்லாமல் கான்ஸ்டபிள் வரை சொன்னார். உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் என கூறினார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.