தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்று முன்தினம் தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பிறந்தநாள் பரிசாக வாசி திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் நானே ஒருவன் பட போஸ்டரும் வெளியாகிறது. ஆனால் தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாடவே இல்லையாம். அவர் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்துள்ளார்.

அதனால் பிறந்த நாளை கொண்டாட பிளான் எதுவுமே போடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 20 வருடங்களாக எனக்கு துணை நிற்கும் ரசிகர்கள் தான் எனது நம்பிக்கை என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
???????????? pic.twitter.com/8XZJd41GYl
— Dhanush (@dhanushkraja) July 29, 2022