சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் உருவான தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியானது.உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜண்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. ஜாலியாக நண்பர்களுடன் படத்தை பார்த்து சிரித்து மகிழலாம் என சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அருளின்ம கள் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படம் சரவணன் அருள் இன் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டதாம். அந்த திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
