விமான நிலையத்தில் வரிசையில் நின்ற விஜய்…. என்ன காரணம் தெரியுமா?…. வைரலாகும் வீடியோ இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகியுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்றுள்ளார். அதற்காக நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் விசாகப்பட்டினம் சென்றால் விஜய். அதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் பயணிகளுடன் தானும் வரிசையில் நின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

வாரிசு திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளதால் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் அது முடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் விமான நிலையத்தில் பயணிகளுடன் வரிசையில் நின்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.