மௌனராகம் சீரியல் மல்லிகா யார் தெரியுமா?…. பலரும் அறியாத வியக்கவைக்கும் சுவாரஸ்ய தகவல்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் தான்  மௌன ராகம். மெளன ராகம் முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.அந்த சீரியலில் கிருத்திகா, சபிதா,ராஜீவ் மற்றும் சிற்பி ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்காக பல்லாயிரக்கணக்கான  கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதில் சக்தியின் அம்மா  மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்தி ரஞ்சித். இவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். பின்னர் திரையுலகில் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார். தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த தர்மா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் மௌனராகம் சீரியல் மூலமாக தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் சீரியல் நடிகையாக மட்டுமில்லாமல்  தயாரிப்பாளர், ரியாலிட்டி சோ நிகழ்ச்சி, தொகுப்பாளினி, விளம்பர பட நடிகை மற்றும் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். மேலும் கர்நாடக மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். மலையாள பிரபல தயாரிப்பாளரான ரஞ்சித் என்பவரை  திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா என்ற ஒரு மகளும் உள்ளார்.