‘மூச்சு முட்ட ஒர்கவுட் செய்யும் அருண் விஜய்’…. அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அவரின் அக்கா…

தமிழ் சினிமாவில் தற்போது ஆக்சன் கிங் நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் விஜயகுமார் மகன் என்பதை பலரும் அறிந்திருப்போம். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை.

பின்னர் பிரியம், கங்கா கௌரி மற்றும் இயற்கை போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அந்த படம் அமைந்தது. அதனைப் போலவே அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது இவர் நடித்துள்ள யானை என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் 44 வயதாகும் அருண் விஜய் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தினம்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் உள்ளார். இவர் தனது வீட்டின் மாடியிலேயே ஜிம் வைத்து உடற்பயிற்சி செய்து வரும் நிலையில், அவரின் சகோதரி அருண் விஜய்க்கு தெரியாமல் அவர் உடற்பயிற்சி செய்து வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. அந்த வீடி யோவில் மூச்சு முட்ட அருண் விஜய் உடற்பயிற்சி செய்வதை நாம் காண முடிகிறது.