ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 திரையிடங்களில் வெளியிடப்பட்டது.

இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது.

அதாவது தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த படம் வெளிவந்த நான்கு நாட்களில் முடிவில் சுமார் 6.5 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
