தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனிடையே நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குஷ்பூ இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகிறார்கள். தற்போது குஷ்பூ மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலை இவரை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குஷ்பு தம்பி குறித்து புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அவரின் தம்பியின் பெயர் அப்துல்லா. இவரும் ஒரு நடிகர் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாயா மோகினி என்ற படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு பேய் கதையை மையமாகக் கொண்டு உருவானது. தற்போது குஷ்பூ தனது தம்பியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் குஷ்புவிற்கு இவ்வளவு அழகான தம்பியா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
