திரைத்துறையில் மாபெரும் சாதனை…. இயக்குனர் ஷங்கருக்கு கிடைத்த கௌரவம்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமா துறையில் மூத்த பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞராகவும் பலராலும் புகழப்படும் இயக்குனர் சங்கர். இவர் கும்பகோணத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார். தனது கல்லூரி நாட்களில் எழுத தொடங்கி கலை நிகழ்ச்சிகள் பலவற்றையும் நிகழ்த்தினார்.

அவரின் திறமையால் பல விருதுகள் மற்றும் கைத்தட்டல்கள் அவரைத் தேடி வந்தன. அது அவருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. பின்னர் நாடக குழுவில் சேர்ந்து இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். பின்னர் அவரின் உதவியாளராக சேர்ந்தார். அதன் பிறகு 1986 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பர படங்களை இயக்கினார்.

அவ்வகையில் 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற திரைப்படம் சங்கரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான காதலன்,இந்தியன் மற்றும் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் வரை இன்றைய திரை உலகின் முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றி கூடியவர் ஷங்கர். இவர் இயக்கிய பல்வேறு படங்களுக்கு மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இன்றைய தலைமுறை இனர் மற்றும் நாளைய படைப்பாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட பெருமிதம் பெற்ற இயக்குனர் சங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி மற்றும் விமல் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.