தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் மூத்த மகனான தனுஷ் தனது மூன்று வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அப்போதிலிருந்து இப்போது வரை தனது வாழ்க்கையை தனுஷ் வீல்சேரில் தான் கழித்து வருகிறார்.

சினிமா மற்றும் அரசியல் என நெப்போலியன் பிஸியாக இருந்தாலும் ஒரு பக்கம் தனது மகனை கவனித்துக் கொண்டுதான் வருகிறார். இந்நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு நேற்று 24 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் தரும் விதமாக நெப்போலியன் வீட்டு வாசலில் சிறிய அளவிலான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தனது மகனுக்கு ஒரு பரிசையும் அவர் வழங்கினார்.அது மட்டுமல்லாமல் அவரின் இளைய மகன் குணால் அமெரிக்காவில் படித்து வந்ததால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்நிலையில் தனது அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு குணால் தமிழில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.