தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்து வருகிறார். விஜயின் தந்தை சந்திரசேகர் இயக்குனராகவும் விஜயின் தாயார் சோபா பாடகியாகவும் சினிமாவில் கலக்கியவர்கள். மேலும் விஜய் சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இதனிடையே விஜயின் அம்மா சோபா தனது மருமகள் குறித்து வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது விஜயின் மனைவி சங்கீதா வீட்டில் எவ்வாறு இருக்கிறார் என்பது குறித்து அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார். அதில், நானும் சங்கீதாவும் மாமியார் மருமகள் கிடையாது, நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

வீட்டையும் குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்வதில் எனது மருமகளை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. எங்களைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. நல்ல அமைதியான பெண். எனது பேரன் பேத்தி இருவரும் சுட்டித்தனம் செய்யாமல் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.