அம்மாடியோ…. ரத்தக்கண்ணீர் படத்திற்கு எம்.ஆர்.ராதா வாங்கிய சம்பளம் இவ்வளவா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நடிகர் தான் எம் ஆர் ராதா. இவர் காமெடி, நடிப்பு என அனைத்திலும் வல்லவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் மற்றொரு பக்கம் புகழ்பெற்ற மேடை நாடக கலைஞராகவும் திகழ்ந்தார். 1950- களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இவர்.

இவரின் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ரத்தக்கண்ணீர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக திரைப்படத்தில் எம் ஆர் ராதாவின் நடிப்பும் அவர் பேசும் வசனங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ரத்த கண்ணீர் படைப்பில் நடிப்பதற்கு எம் ஆர் ராதா சில நிபந்தனைகளை போட்டுள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மேடை நாடக நடிகர் ஆன இவர் தனது நாடகத்தை முடித்த பிறகு தான் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவ்வையார் படத்திற்கு கே பி சுந்தராம்பாள் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.

எனவே தனக்கு அவர் வாங்குவதை விட 25 ஆயிரம் ரூபாய் அதிகமாக சம்பளம் வழங்க வேண்டும் என்று இவர் கேட்டுள்ளார். இவரின் இந்த நிபதனைகளை கேட்டு ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் பெருமாள், படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக செய்து முடித்தார். ரத்தக்கண்ணீர் படத்திற்காக எம் ஆர் ராதா வாங்கிய சம்பளம் மற்றும் நிபந்தனைகள் குறித்த இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.