ஹாலிவுட் மாபெரும் வெற்றி பெற்ற பைட் கிளப், செவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பிராட் பிட். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இவர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஏஞ்சலினா ஜோலியை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தனர்.

அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்நிலையில் பிராட் பிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஜப்பான் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்ற நிலையில், அதற்கு பிராட் பிட் வித்தியாசமான உடையில் வருகை தந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் பாவாடை போன்ற ஒரு உடையை அணிந்து வந்துள்ளார்.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த போது இது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் வித்தியாசமான முறையில் பதில் அளித்தார். அதாவது நாம் அனைவரும் ஒரு நாள் சாகப் போகிறோம்,எனவே வாழ்வில் எதையாவது வித்தியாசமாக செய்வோம் என்று தனது உடையை குறித்து அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
