நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இதில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அப்போது ஒரு சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன் சென்று இருந்தனர்.

பின்னர் சென்னை திரும்பிய இருவரும் அவரவர் வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டனர். அதன்படி நயன்தாரா , ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மறுபக்க விக்னேஷ் சிவன் இயக்குனராக தனது பணிகளை தொடங்கி விட்டார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவின் ப்ரோமோவை நெட்லிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Cue the malems cos we're ready to dance in excitement????
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022