தமிழ் திரை உலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர்கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஆகவும் உள்ளார்.

இதனிடையே இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சினேகன் அறக்கட்டளை பெயரில் போலி சமூக சமூக வலைதள பக்கம் ஒன்றை தொடங்கிய பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, அதன் மூலமாக பணம் வசூலித்து வருவதாக சினேகன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய நண்பர்களை சந்தித்தபோது அதில் சிலர் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள பக்கத்தில் பணம் வசூலித்து வருவதாக கூறினர். அதனைத் தொடர்ந்து சில நாட்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அறக்கட்டளை பெயரில் பணம் பெற்று வருவது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

அதனால் இணையதளத்தில் இருந்த முகவரியை தேடிச் சென்று பார்த்த போது அங்கு ஒரு அப்படி அலுவலகமே கிடையாது என்று எங்களுக்கு தெரிய வந்தது. பின்னர் இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி யின் பெயர் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தனது அறக்கட்டளையை பயன்படுத்தி பண மோசடி செய்ததாக பிரபல பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகை ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “எந்த இடத்திலும் சினேகன் பெயரை பயன்படுத்தி நன்கொடை வாங்கவில்லை . நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் சினேகன் தன்னை தவறாக சித்தரிக்கும் மூக்கில் இது போன்ற புகார் அளித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.