“சினிமாவில் பெண்களை மதிப்பதே இல்லை”….. என்னெல்லாம் நடக்குது தெரியுமா?…. நடிகை தமன்னா ஓபன் டாக்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!

இந்திய சினிமாவில் ரசிகர்களின் கதாநாயகியாக திகழும் நடிகை தமன்னா முன்னணி நட்சத்திர கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் இறுதியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு என தற்போது பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சினிமாவில் பெண்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது சினிமா துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றும், நான் இரண்டு பான் இந்தியா படங்களில் நடித்துள்ளேன் . ஆனால் ஒரு படத்தின் போஸ்டரில் கூட என் புகைப்படம் இடம்பெறவில்லை. சினிமாவில் யாரும் பெண்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் ஏதேனும் கருத்து கூறினால் கூட அது சரியா என என்னையே யோசிக்க செய்வார்கள்.

ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தேன். தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வருகின்றது. ஹீரோக்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு தான். தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை கூட எளிதில் வாங்கி விடலாம், ஆனால் அங்கீகாரம் மட்டும் அவ்வளவு எளிதில் வாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இவர் இப்படி வெளிப்படையாக கூறியுள்ள இந்த தகவல் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.