முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் இன்று தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக களமிறங்குகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த பாடல் சமீபத்தில் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இதனைத் தொடர்ந்து இன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் மதுரவீரன் பாடலை அதிதி சங்கர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலை முதன்முதலாக பாடியது சூப்பர் சிங்கர் மூலமாக அனைவரின் மனதையும் கவர்ந்த பின்னணி பாடகி ராஜலட்சுமி தான்.

அதன் பிறகு அவர் பாடியதை எடுத்துவிட்டு அதிதி சங்கரை பாட வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் அதிதி சங்கரின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜலஷ்மி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது முதல் முதலாக அதிதி சங்கர் பாடியது குறித்து அவர் பேசியுள்ளார்.

விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரவீரன் பாடலை நான் பாடியது உண்மைதான், ஆனால் அதிதி நல்லா பாடுறாங்க. அதனால் தான் பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்துக் கொண்டு அவரை விமர்சனம் செய்ய வேண்டாம். அவ்வாறு விமர்சனம் செய்வது எனக்கு வருத்தமா இருக்கு என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.