துளி மேக்கப் இல்லாமல்…. திடீரென கோவிலுக்கு சென்ற விஜய் டிவி பிரபலங்கள்…. இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதில் பெரும்பாலான சீரியல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு ஹிட் கொடுக்கும். அவ்வரிசையில் டாப் சீரியல்களின் முதல் இடத்தைப் பிடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரித்விகா.

அதனைப் போலவே அடுத்ததாக டாப் லிஸ்டில் இருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக பவித்ரா ஜனனி நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதனால் அதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளியாகும். அதன்படி ரித்விகா மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இவர்கள் இருவரும் திடீரென மாதேஸ்வரன், நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது இருவரும் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் எளிமையாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.