“ஒரு பொண்ணே போதும்”என நினைத்தேன்…. ஆனால் அதை பார்த்ததும்…. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் கார்த்தி….!!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபலமான நடிகராக திகழும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. தனது தந்தையைப் போலவே இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகின்றன.

இதில் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதனைப் போலவே இளைய மகனான நடிகர் கார்த்தி கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது .

இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உமையாள் என பெயர் சூட்டினார். அதன் பிறகு கார்த்தியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். பின்னர் இரண்டாவதாக இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை மகிழ்ச்சியாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் தனது மகனுக்கு கந்தன் என்று முருகப்பெருமானின் பெயரை கார்த்தி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணா, அம்மாவும் அக்காவும் நானும் உனக்கு மிக ஆசையாக கந்தன் என்று பெயர் வைத்துள்ளோம். உன்னுடைய வருகையால் நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.. அன்புடன் அப்பா என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தான் விருமன்.இந்தத் திரைப்பட விழாவில் கார்த்தி தனது இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள காரணம் என்ன என்பது குறித்து பேசி இருந்தார். அதில், நான் முதலில் ஒரு பொண்ணு போதும் என்று நினைத்தேன் . ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என் மகளை கூட பார்க்காமல் என் மனைவி என்னுடன் வந்துவிட்டார்.

அதனைப் போலவே என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னால் செல்ல முடியவில்லை. அப்போது அவரின் தம்பி தான் என் மனைவியுடன் இருந்தார். அப்போதுதான் இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தபோது எனது மகன் கந்தன் வந்தான் என்று நெகிழ்ச்சியுடன் அவர் பேசியுள்ளார்.