இது வேற லெவல்…. பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரியாகும் பாக்கியராஜ்…. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?….!!!!

தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகராக திகழ்வர் பாக்கியராஜ். அவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவரின் படங்களுக்கு பெண் ரசிகர்களின் வரவேற்பு எப்போதும் அதிக அளவில் இருக்கும். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர்,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவர் முதன்முதலாக பிரவீனா என்பவரை கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் உடல் நல குறைவு காரணமாக அவர் திடீரென உயிரிழந்ததால் 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற ஒரு மகன் உள்ளார். அவரும் தற்போது திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். தன் அப்பாவை போலவே சாந்தனவும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளி திரையில் அறிமுகமே தேவைப்படாத இயக்குனர் பாக்கியராஜ் தற்போது ஜீ தமிழ் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலில்நீதிபதி கேரக்டருக்கு சிறப்பு என்ட்ரியாக இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் நடித்து வருகிறார்.

அவர் பங்குபெறும் இந்த எபிசோடுகளில் அவர் தனக்கே உரிய இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பால் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரின் நடிப்பை மீண்டும் திரையில் பார்ப்பதற்காகவே பலரும் அந்த சீரியலை தவறாமல் பார்த்து வருகின்றனர்.