அம்மாடியோ இத்தனை லட்சமா?….. சிவகார்த்திகேயன் படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது…..!!!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன.இவரைப் போலவே தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் பாரதிராஜா, சூரி,சமுத்திரகனி மற்றும் நட்டி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்ணன் தங்கை பாசம், கிராமத்து வாழ்க்கை,காதல் மற்றும் உறவுகள் என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி வெளியான திரைப்படம் தான் நம்ம வீட்டுப் பிள்ளை. சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த படங்களில் இந்த படமும் மிக முக்கியமான ஒன்று.

இந்நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நிகராக அவரின் தங்கையாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சுமார் 75 லட்சம் சம்பளம் வாங்கியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டாப் ஹீரோயின்களுக்கு டாப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில வருடங்களாகவே தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தற்போது குவிந்து கொண்டிருக்கின்றன.