படுத்த படுக்கையாக இருந்த எம்.ஜி.ஆர்…. திடீரென கமல்ஹாசனை அழைத்து செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

தமிழகத்தில் இவரது ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். இவரது பெயரை சொன்னால் யாருமே தெரியாது என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக பேசப்பட்டவர்.

இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. அப்படிப்பட்ட இவர் இப்போதும் இருந்திருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். அவ்வகையில் எம்ஜிஆர் தனது இறுதி காலத்தில் அதாவது 1980களில் தற்போதைய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஒருவரை சந்தித்தது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசி உள்ளார்.

அதாவது 1980ல் எம்ஜிஆர் உடல் நல முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த போது நடிகர் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது கமல்ஹாசன் குழந்தையாக இருக்கும் மகள் ஸ்ருதிஹாசனை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது கமல்ஹாசனின் மகளை கொன்றிய எம்ஜிஆர் தனது மனைவி ஜானகி வைத்திருந்த நகைகளை அள்ளிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அதனைப் பார்த்து செய்வதறியாமல் கமல்ஹாசன் திகைத்துப் போய் நின்றதை எம்ஜிஆர் தோட்டத்தில் நண்பர் பார்த்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். தனது இறுதி காலத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை எம்ஜிஆர் சந்தித்தது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.