தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால். அதுமட்டுமல்லாமல் அவர் கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் தான் விலகுவதாக திடீரென அறிவித்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளனர். சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை இந்த உலகின் சிறந்த தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். அதாவது தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக காஜல் அகர்வால் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் கணவர் கௌதம் கிட்சுலுவுக்கு முத்தம் கொடுத்தது போலவும் குழந்தை கணவரின் மடியில் படுத்து இருப்பது போலவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.