தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. அப்ப படத்தில் விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெப் சீரிஸ் களில் நடித்து வந்தனர். இருவரும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வபோது ஒன்றாக இணைத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள்.

இந்நிலையில் பிபாஷா பாசு கர்ப்பமாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் அவர் தனது கணவருடன் அழகாக போட்டோ ஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது ஒரு புதிய நேரம், எங்களுக்கு ஒரு புதிய கட்டம் இது, இரண்டு பேர் மட்டுமே அன்பை பரிமாறிக் கொண்டிருந்தோம்.

தற்போது அது மூன்றாவது மாறப்போகிறது. நமது அன்பால் இந்த பூமிக்கு வெளிப்படும் ஒரு படைப்பு நம் குழந்தை விரைவில் நம்முடன் சேர்ந்து நமக்கு மகிழ்ச்சியை சேர்க்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.