சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் தியா. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான சன் டிவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ சூப்பர் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு டிவி பக்கமே வராமல் சிங்கப்பூரில் செட்டில் ஆனார் இவர். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே கர்ப்பம் குறித்து அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், நான் கர்ப்பம் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டோம். என் வீட்டில் அனைவருக்கும் சொன்னவுடன் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். முதல் மூன்று மாதம் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு நாளைக்கு 30 தடவை வாந்தி எடுப்பேன். அக்கா கையால் சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கும்.

ஆனால் நாங்கள் சிங்கப்பூரில் இருந்ததால் எல்லாமே இருவரும் சேர்ந்து பார்த்துக் கொண்டோம். பிறகு ஐந்து மாதத்தில் நான் என் அம்மா வீட்டிற்கு வந்தபோது அக்கா மற்றும் அக்கா பையன் நண்பர்கள் என அனைவரும் இருந்தனர். என் மனதிற்கு பிடித்த மாதிரி வளைகாப்பு விழா நடந்தது. எந்த குழந்தை பிறந்தாலும் எனக்கு ஓகே தான்.

ஆனால் என் அக்கா பையன் எனக்கு மூத்த பையன் மாதிரி என்பதால் ஒரு பையனும் ஒரு பொன்னும் வேண்டும் என எனக்கு ஆசை என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் ஆசைப்பட்டதை போலவே பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.