தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். 80 களில் பிரபலமான நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் திரைப்படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது ஆகஸ்ட் 16, 1947 என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இயக்குனர் முருகதாஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சுதந்திரப் போராட்ட பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தப் படம் கௌதம் கார்த்திக்குக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு சில படங்களில் இவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் திருமணம் குறித்து அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவியது. அதாவது இவரும் மஞ்சிமா மோகனும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனிடையே இந்த வதந்தி குறித்து நடிகர் கௌதம் கார்த்திக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஆம், எனக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது. உரிய நேரம் வரும்போது இது குறித்து உங்களிடம் விரிவாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
