அம்மாடியோ…. நடிகை நயன்தாரா இத்தனை தொழில்களில் முதலீடு செய்திருக்காங்களா?…. பலருக்கும் தெரியாத உண்மை இதோ…..!!!

தமிழ் சினிமாவில் இன்றளவும் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் இருக்கும் நயன்தாரா தனது அழகால் ரசிகர்களை வெகுவாக சொக்க வைத்துள்ளார். தற்போது ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்ற இவர்கள் கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூனுக்காக சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து ரொமாண்டிக் முறையில் எடுத்துக்கொண்டால் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா சினிமாவை தவிர்த்து மற்ற சில தொழில்களையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி நயன்தாரா முதன் முதலில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை இவர் தயாரிப்பில் பல படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக நயன்தாரா முதலீடு செய்த தொழில் வாய் சவாலே எனும் தேநீர் பிராண்ட். இந்த நிறுவனத்தில் இவர் 5 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது வாய் சவாலே என்பது தென்னிந்தியாவில் நன்கு விற்பனையாகி வரும் டீ பிராண்டு தான். இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக தனது தோழி ரெனிட்டா ராஜனுடன் சேர்ந்து லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்தி வருவதால் அதிலும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

இறுதியாக நயன்தாரா பிஃபோலோ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். இறைச்சிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தில் நயன்தாரா விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எண்ணெய் பிசினஸில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதற்காக 100 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் ஒரு பக்கம் கலக்கி வந்தாலும் மறுபக்கம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்த்து வருகிறார் நடிகை நயன்தாரா.