சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விக்ரம்…. திடீர் அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு சியான் என்று தான் அழைப்பார்கள். அவர் என் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் சோழா சோழா பாடல் வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடிகர்கள் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம், இந்த படத்தில் நடித்ததை எனது பாக்கியமாக நினைக்கிறேன்.

அதேசமயம் மணிரத்தினம் மற்றும் சங்கர் ஆகியோர் படங்களில் நடித்த பின்னர் சினிமாவிலிருந்து ஓய்வு பெறலாம் என முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தனது உடல்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.