“நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம்”….. நான் சாண்டியை மனிக்கவே மாட்டேன்…. கொந்தளித்த நடிகர் கார்த்தி….!!!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்துள்ளது. இதில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கான நடனத்தை சாண்டி மாஸ்டர் இயக்கியிருந்தார். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் நடிகர் கார்த்தி பல்டி செய்திருப்பார். இது குறித்து கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர் சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர் மன்னிக்கவே மாட்டேன்”என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.