தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சார்மி. இவர் தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு மற்றும் காதல் கிசுகிசு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே இவரும் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் தீயாய் பரவியது.

இந்நிலையில் இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடந்த பட விழா நிகழ்ச்சியில் இதற்கு பூரி ஜெகன்னாத் விளக்கம் அளித்துள்ளார். அதாவது,சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகிறார்கள். காதல் கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள் தான். நட்பு தான் நிரந்தரம். சார்மியை 13 வயதிலிருந்தே எனக்கு நன்றாக தெரியும். 20 ஆண்டுகளாக அவரோடு சேர்ந்து பயணிக்கிறேன். அவர் எனக்கு நல்ல சினேகிதி. எங்கள் இருவர் இடையே எந்த தவறான உறவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
