தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகையா இது?…. இப்படி மாறீட்டாங்களே…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் கோதையாக நடித்து வருபவர் தான் மீரா கிருஷ்ணன். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். மார்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மற்றும் சித்தி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் அம்மா கோதையாக இவர் நடித்து வருகிறார்.

இவருக்கு உண்மையிலேயே வயது 35 தான். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இன்ஸ்டாகிராமில் இவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி முடியின் அளவை குறைத்து மார்டன் உடையில் போட்டோவுக்கு இவர் போஸ் கொடுத்துள்ளார். யுவராது என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஒரு புது ஷோ ஒன்றுக்காக இப்படி ஒரு கெட்டப் போட்டுள்ளதாக மீரா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.