இயக்குனர் சங்கரின் மூத்த மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா?….. இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் சங்கர். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அதிதி என்ற இரண்டு மகள்களும் அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளார். இதில் இளைய மகள் அதிதி சங்கர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.

அவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.அந்தத் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. பிரபல தொழிலதிபரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் பிரமாண்டமாக நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அவரின் மகள் ஐஸ்வர்யா தனது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.