ரஜினி வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி…. குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்…. வைரல் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார்.

இப்படி பல்வேறு புகழுக்குரிய இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. முதல் மகள் ஐஸ்வர்யா தனுசை திருமணம் செய்து கொண்டு அண்மையில் பிரிந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகள் சௌந்தர்யா அண்மையில் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு வேடம் அணிவித்து கிருஷ்ணனை வீட்டுக்கு வரவழைத்து கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ரஜினியின் மகள்கள் மற்றும் மனைவி பேரக்குழந்தைகள் என அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.