தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய இளைய மகள் கல்லூரி படித்து வருகின்றனர். இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி மருத்துவராக உள்ளார். இந்நிலையில் இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது.

இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மகளின் கழுத்தில் தாலி ஏறும்போது சரண்யா பொன்வண்ணன் ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://youtu.be/luVNZ25Nmg0