கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் வேதா. இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்களான புஷர் மற்றும் காயத்ரியே தற்போது ஹ்ரிர்த்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி சிறைக்கு வரவுள்ளது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தை பார்த்து மிகவும் பிடித்துப் போனதால் அவர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிர்திக் ரோஷன்.

ஹிந்தி விக்ரம் வேதா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளார். தற்போது இருவரும் மிரட்டும் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதிலும் குறிப்பாக விக்ரம் வேதா படத்தில் வருவதைப் போலவே ஒரு கதை சொல்லட்டுமா என வேத ஆரம்பிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. புஷ்கர் காயத்ரி கதை மற்றும் தயாரிப்பில் அண்மையில் வெளியான சுழல் வெப் சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் வெளியாக இருக்கும் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.