இது என்ன கொடுமை?…. மதுரை முத்துக்கு டப் கொடுக்கும் அதிதி ஷங்கர்…. தோற்று தலை தெறிக்க ஓடியது இவரா….????

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் சங்கர். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அதிதி என்ற இரண்டு மகள்களும் அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளார். இதில் இளைய மகள் அதிதி சங்கர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.

அவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.அந்தத் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே அவர் மேடையில் சொல்லும் சில ஜோக்குகள் தான் அவரை தற்போது ட்ரோல் மெட்டீரியல் ஆக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிதி பற்றிய மீம்கள் தற்போது அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மதுரை முத்து அப்படிப் பேசி காமெடிகளை வாரி இறைத்து கொண்டு இருப்பார். ஆனால் தற்போது அவருக்கு போட்டியாக அதிதி சங்கர் வந்துள்ளார்.

இவர்கள் இருவரையும் வைத்து ஒரு வீடியோ மீம் வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் அதிதி சங்கரிடம் மதுரை முத்து தோற்று ஓடுவது போல இருக்கின்றது. அந்த வீடியோவை தற்போது மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.