கல்லூரி படிக்கும் போது இப்படி ஒரு வேலையை செய்தேன்…. எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்…. வியந்து போன ரசிகர்கள்…..!!

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார். அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி பாணியில் ஹீரோ,வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வரும் எஸ்கே சூர்யா தனது கல்லூரி காலங்களில் பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படித்து வந்துள்ளார். அதாவது ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் பணியை செய்ததாகவும், எந்த தொழில் செய்தாலும் அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்கின்ற பாகுபாடு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தால் கூட எந்த கூச்சமும் தயக்கமும் இல்லாமல் அந்த பணியை நான் செய்தேன் என்று தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு கருத்தை எஸ்.ஜே சூர்யா முன் வைத்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை நிகழ்வை பகிர்ந்துள்ளது பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.