சபரிமலைக்கு தனுஷுடன் சென்ற முக்கிய பிரபலம்…. இதுவரை பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படம் இதோ….!!!!

தன்னுடைய தனித்துவமான இசையமைப்பாள் லட்சக்கணக்கான இளைஞர்களை தன் வசம் வைத்திருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். இன்று வரை பல்வேறு சாதனங்களை படைத்த அனிருத் ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, இரண்டாம் உலகப் போர், வேலையில்லா பட்டதாரி மற்றும் மான் கராத்தே உள்ளிட்ட பல்வேறு படங்களில் இசை அமைத்தார். அதே வருடத்தில் கத்தி மற்றும் காக்கி சட்டை உள்ளிட்ட நான்கு படங்களிலும் 2015 ஆம் ஆண்டு மாறி, நானும் ரவுடிதான் மற்றும் வேதாளம் உள்ளிட்ட நான்கு படங்கள் என வருடத்திற்கு நான்கு படங்களில் ஆவது தன் வசம் வைத்திருந்தார்.

அதிலும் குறிப்பாக தனுசு உடன் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி மற்றும் தங்க மகன் உள்ளிட்ட வருடத்திற்கு ஒரு படத்தின் பணியாற்றி விடுவார் அனிருத். தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இசையமைப்பாளர்கள் என்றால் அது அனிருத் மற்றும் தனுஷ் தான். ரசிகர்களின் டிஎன்ஏ என்று அழைக்கப்படக்கூடிய இவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளனர்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்மையில் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இருவரும் அதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவிற்கு பாடல்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் நெருங்கிய உறவினர்களான தனுஷ் மற்றும் அனிருத் எப்போதுமே நெருக்கமாக தான் இருப்பார்கள்.

அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷ் அனிருத் தனது இன்னொரு மகன் என்று கூறி இருந்தார்.இதனிடையே தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த போது எடுக்கப்பட்ட அன்சின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸும் உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இதனை அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.