நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில் கடந்த வாரம் இரண்டாவது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.அங்கு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அவ்வபோது விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு போட்டியாக மற்றொரு நட்சத்திர ஜோடி தற்போது ஹனிமூன் சென்று உள்ளனர்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அவர்கள் வேறு யாரும் கிடையாது நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி தான். இருவரும் காதலித்து கடந்த மே 18ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தங்களுக்கு திருமணம் ஆகி 100 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து அதனை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சென்று உள்ளனர்.

அங்கிருந்து ஜோடியாக இருவரும் எடுத்துக் கொள்ளும் அழகிய ரொமான்டிக் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
