விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று புகழாரம் பேசிக்கொண்டு வந்த இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னை பிரபலமாக்கும் நோக்கத்தில் நடிகர்கள் குறித்து,பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

அவர் வெளியிட்ட பல்வேறு வீடியோக்கள் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.அது மட்டுமல்லாமல் அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் காவல்துறையில் புகார் அளித்தனர்.அந்த புகாரி அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கழகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் மற்றும் திரை துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதற்கு நடிகை மீரா மிதுன் உடனடியாக இருந்ததின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜரான நிலையில் மீரா மிதுன் ஆஜராகவில்லை. அதனால் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு மீரா மீது உனக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வந்த நிலையில் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரான நிலையில் அப்போதும் மீரா மிதுன் வரவில்லை.இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டு மீரா மிதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும் தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாகவும் சிறப்பு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.