காதல் கணவருடன் நடுரோட்டில்….. பிரியா அட்லீ வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அட்லியின் மனைவி பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தனது காதல் கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பிரியா அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.