கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர்.

இந்தத் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக தெலுங்கு,தமிழ் மற்றும் இந்திய என பல மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என மும்பையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் மனோஜ் தேசாய் கூறியிருந்தார்.

இந்த விமர்சனம் வைரலானதை தொடர்ந்து திரையரங்க ஓனரை சந்தித்த விஜய் தேவரகொண்டா அவரின் காலில் விழுந்து கட்டி அணைத்துக் கொண்டு டைகர் படத்தின் ப்ரோமோஷன் காக முப்பது நாட்கள் கடுமையாக உழைத்ததாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்ட ஹீரோ ஹீரோயினியை அல்லது அவர்கள் படங்களை மட்டும் பாய் காட் செய்யவில்லை.

அப்படத்தில் பணியாற்றிய மொத்த குழுவினரின் உழைப்பையும் பாய்காட் செய்வதால் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நான் அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவை புகழ்ந்த தியேட்டர் ஓனர் தேசாய், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு எப்போதும் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை வெளியிடுவேன் என உறுதி அளித்தார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது லைகர் டீமின் publicity stunt எனவும் சிலர் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.
