தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு ஒரு அண்ணன் உள்ளார்.

அவரும் ஒரு பிரபலமான சீரியல் நடிகர் தான். அவருடைய பெயர் மணிகண்டன். சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியவர். மேலும் இவர் வேலு நாச்சியார், கேளடி கண்மணி, வள்ளி, சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரர் இவர்தான் என்பது பலருக்கும் தற்போது வரை தெரியாத உண்மை.
