துளி பயமில்லாமல் யானையின் அருகே…. போட்டோ ஷூட் எடுத்த வரலட்சுமி சரத்குமார்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் சமந்தாவின் யசோதா, பாம்பன் மற்றும் தெலுங்கு சூப்பர் ஹீரோ நந்தமுறி பாலகிருஷ்ணாவின் 107வது படம் உள்ளிட்டவற்றின் தற்போது கமிட்டாகியுள்ளார். இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் யானை குட்டியுடன் வரலட்சுமி சரத்குமார் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.