விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான் சந்தோஷ். அந்நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்த பேச்சுகள் அவ்வபோது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. வழக்கமாக குக் வித் கோமாளி போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நெருக்கமாவார்கள்.

ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களை ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக நெருக்கமாகி விட்டனர். அதாவது ஒன்றாக கோவில், பிக்னிக், டின்னர் மற்றும் பார்ட்டி என சொந்த குடும்பம் போல் சேர்ந்து விட்டனர். அவ்வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சுனிதா மற்றும் சந்தோஷ் குறித்த காதல் பேச்சுகள் இணையத்தில் வெளியாகின. ஆனால் அதற்கு சந்தோஷ் உண்மை இல்லை என விளக்கம் அளித்தார்.

அதேசமயம் சந்தோஷ் எலிமினேட் ஆனவுடன் சுனிதா தேம்பித் தேம்பி அழுதார். சந்தோஷ் மற்றும் சுனிதா ஜோடிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இருவரும் ஒன்றாக இணைந்து இன்ஸ்டார் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் பல போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே சந்தோஷ் மற்றும் சுனிதா இருவரும் சேர்ந்து விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளன.
View this post on Instagram
அதற்கான பிளானிங் நடந்து வருவதாக கூறிய சுனிதா,ரொமான்டிக் மோடியில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் இருக்கு என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு சந்தோஷ் உடன் மிக நெருக்கமாக இருக்கும் நடிகை காயத்ரி ரெட்டி OMG என்று கமெண்ட் செய்து இருக்கிறார். சந்தோஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து வருவதாக நிலையில் வீடியோவை பார்த்து காயத்ரி இவ்வாறு கமாண்ட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
