கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ்.

இந்நிலையில் இவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 50 கோடி நன்கொடை அளித்துள்ளதாக இணையத்தில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பார்த்து பலர் அவரை விமர்சித்தும் பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நேரில் சென்ற இவர் ராமர் கோவில் கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததாக சந்தோஷ் திருபதி என்ற பயணர் ஒருவர் அறிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். ஆனால் இந்தச் செய்தி போலியானது என்றும் அவர் எந்த ஒரு அறிக்கையும் கூறவில்லை எனவும், இந்த புகைப்படம் கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வெளிய ஆவதற்கு முன்பு திருப்பதிக்குச் சென்ற போது எடுத்த புகைப்படம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.