என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?…. விஜய் டிவி சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…. வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மிகுந்த விறுவிறுப்புடன் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக டிஆர்பி யில் முதலிடத்தில் உள்ளது. இதில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நினைவாக கொண்டு போராடும் பெண்ணின் கதை ஒரு பக்கமும், மறுபக்கம் தனது மனைவியை எப்படியாவது ஐபிஎஸ் ஆக்கிவிட வேண்டும் என்று கணவரின் துடிப்புடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். சந்தியா கதாபாத்திரத்தில் முதலில் ஆலியா நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் ஆதி, ஜெஸ்ஸியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார்.

இது ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வர தற்போது காதையின் மீது குடும்பமே கோபத்தில் இருக்கிறது.ஆதி மற்றும் ஜெசி திருமணம் நடக்குமா என்று பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலின் சூட்டின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதில் ஆதி மற்றும் ஜெசி இருவரும் இருக்கும் காட்சி படம் எடுக்கப்பட்ட போது ஜெசிக்கு ஸ்டூல் வைத்து இருக்கிறார்கள். இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றன. ஜெசி உங்களுடைய திறமைக்கு வேற சீரியலில் போய் நடியுங்கள், இந்த சீரியலில் இருந்தால் இப்படித்தான் விமர்சிப்பார்கள், ஸ்கூல் மேலே நின்றா நடிக்கிறாங்க?அதுக்கு அந்த ஹீல்ஸ் செருப்புல நின்னு நடிச்சாலே உயரமா இருக்கும் இல்ல என்று கேலி செய்து அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.