42 வயதாகும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன்…. பிரபல நடிகைக்கு ரகசிய திருமணமா..?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். இவரின் இசையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தது. அதிலும் குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

அதனால் இவரின் மார்க்கெட் தற்போது எகிறி உள்ள நிலையில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என பிசியாக உள்ளார். தற்போது சூரியா 42 மற்றும் prince உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் 42 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாந்துக்கு பிரபல தெலுங்கு நடிகையுடன் ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் நடிகை பூஜிதாவுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வெளியான தகவலுக்கு நடிகை பூஜிதா விளக்கம் அளித்துள்ளார். அதில்,நானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவல் துணியும் உண்மை இல்லை. இது போன்ற தகவல்கள் எப்படி பரவுகின்றன என்பது எனக்கு உண்மையில் தெரியவில்லை.

அவருடன் நான் டேட்டிங் கூட இதுவரை சென்றதில்லை. இப்போதும் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். தற்போது வெளியான தகவல் முற்றிலும் ஒரு வதந்தி. இது போன்ற பொய்யான செய்திகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என வேதனையுடன் பூஜிதா தெரிவித்துள்ளார்.