தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீர்பான் பதான், மியா சார்ஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் 7 வித்தியாசமான கெட்டப் களில் விக்ரம் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இதனிடையே 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இதுவரை 50 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் நடுவே 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் விமர்சனங்களுக்கு நடுவே படம் தோல்வியை தழுவியிருப்பது படகுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
