தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த நஸ்ரியாவின் கணவர் தான் பகத் பாசில் . தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.புஷ்பா மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இவர் விரைவில் தொடங்க உள்ள புஷ்பா 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே பெங்களூரு டேஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்ததன் மூலம் இருவருக்கு இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா சினிமாவை விட்டு விலகிய நிலையில் பகத் பாசில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பகத் பாசில் 3.15 கோடி மதிப்பிலான புதிய லம்போர்கினி உருஸ் என்கிற காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 1.9 கோடி மதிப்பில் உள்ள போர் சே 911 கரீரா எஸ் என்கின்ற காரை வாங்கி தன் மனைவி நஸ்ரியாவுடன் காரின் முன்பு நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகத் பாசில் இணையத்தில் பகிர்ந்த நிலையில் இந்த முறை புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதுவுமே அவர் பகிரவில்லை.

பகத் பாசில் தற்போது வாங்கியுள்ள கார் தான் உலகத்திலேயே அதிகமான பெசிலிட்டி கொண்ட முதல் கார். பொதுவாக கார் ரேஸில் அதிகம் ஆர்வம் கொண்ட பகத் பாசில் அவ்வபோது புதிய கார்களை வாங்கி வரும் நிலையில் அவ்வகையில் தற்போதும் புதிய காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.